TNPSC Thervupettagam

"மின்சாரம் 2024" அறிக்கை

February 4 , 2024 294 days 278 0
  • சர்வதேச எரிசக்தி முகமை ஆனது (IEA), "மின்சாரம் 2024" என்ற ஒரு அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • 2024 முதல் 2026 ஆம் ஆண்டு வரை சராசரியாக 3.4% என்ற விகிதத்தில் மின்சாரத் தேவை அதிகரிக்க உள்ளதால், மின்சாரத் தேவையில் ஒரு வலுவான உலகளாவிய அதிகரிப்பு பதிவாக உள்ளதாக இந்த அறிக்கை கணித்துள்ளது.
  • இந்த மின்சாரத் தேவை அதிகரிப்பில் சீனா, இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் முன்னணியில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
  • 2026 ஆம் ஆண்டில், உலகின் மின்சாரத்தில் சுமார் பாதியளவானது, புதுப்பிக்கத்தக்க மற்றும் அணுசக்தி உள்ளிட்ட குறைந்த மாசு உமிழ்வு கொண்ட மூலங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • இந்தியாவின் வருடாந்திர சராசரி மின்சாரத் தேவை அதிகரிப்பானது 2024-2026 ஆம் ஆண்டு காலத்தில் 6.5% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
  • இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தனிநபர் மின்சாரப் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது.
  • இது முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆப்பிரிக்காவில் தேக்க நிலையில் உள்ளது.
  • 2023 ஆம் ஆண்டில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக ஐரோப்பிய ஒன்றியத்தில் மின்சாரத் தேவை குறைந்துள்ளது.
  • உலகளாவிலான மின்சார உற்பத்தியில் இருந்து வெளிவரும் CO2 உமிழ்வு ஆனது, 2023 ஆம் ஆண்டில் 1% அதிகரித்து, 2024 ஆம் ஆண்டில் 2 சதவீதத்திற்கும் அதிகமான அளவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • 2023 ஆம் ஆண்டில் மிகவும் தீவிர வானிலை நிகழ்வுகள் ஆனது அமெரிக்காவிலும் இந்தியாவிலும் பெரும் மின் தடைகளை  ஏற்படுத்தின.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்