மின்னணு ஆளுகை ஆட்சி (e-Governance) மீதான 21வது தேசிய மாநாடு
March 1 , 2018 2463 days 803 0
மின்னணு ஆளுகை ஆட்சி மீதான 21வது தேசிய மாநாடு ஹைதராபாத்தில் (தெலுங்கானா) நடைபெற்றது.
இந்த மாநாடு, நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொது குறைதீர்ப்புத் துறை (Department of Administrative reforms and Public grievances – DARPG), மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், மற்றும் தெலுங்கானா அரசு ஆகியவற்றின் கூட்டிணைப்பால் நடத்தப்பட்டது.
இந்த ஆண்டிற்கான இந்த மாநாட்டின் கருத்துரு மேம்பாட்டை முடுக்கிவிடுவதற்கான தொழில்நுட்பம் (Technology for Accelerating Development) ஆகும்.
e-Governance என்பது, பணி ஒதுக்கீட்டு விதிமுறைகள் (Allocation of Business Rules) 1961 ன் இரண்டாவது அட்டவணையின் கீழ் DARPGக்கு ஒதுக்கப்பட்ட ஒரு பணியாகும். DARPG ஆனது பணியாளர், பொது குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் (Ministry of Personnel, Public Grievances and Pensions) கீழ் செயல்படுகிறது.
நாட்டின் இலக்குகள் மற்றும் முன்னுரிமைகளுடன் இசைந்து செயல்பட்டு e-Governance-ஐ ஊக்குவிப்பதற்கான பங்கு (Role) DARPG வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.