TNPSC Thervupettagam

மின்னணு கழிவு உற்பத்தி

June 8 , 2018 2363 days 761 0
  • அசோசாம் NEC (ASSOCHAM-NEC) என்ற நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கையின் படி உலகின் ஐந்து முன்னணி மின்னணு கழிவுகளை ஏற்படுத்தும் நாடுகளில் (e-Waste Generation) இந்தியா முதலிடத்தில் உள்ளது.
  • இந்தப் பட்டியலில் உள்ள பிற நாடுகள் சீனா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஜெர்மனி ஆகியனவாகும்.
  • இந்த ஆய்வறிக்கை உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5ம் தேதியுடன் (World Environment Day) ஒத்திப் போகும் வகையில் வெளியிடப்பட்டது.
  • இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலம் 19.8 சதவிகிதம் என்ற அளவிற்கு மிகப் பெரிய மின்னணு கழிவுகளை தோற்றுவித்தாலும் வருடத்திற்கு 47,810 டன்கள் என்ற அளவிற்கு மட்டுமே அவற்றை மறுசுழற்சி செய்கின்றது.
  • அதே சமயம் அதற்கு எதிராக தமிழ்நாடு 52,427 டன்களும் (13 சதவிகிதம்) உத்தரப்பிரதேசம் 86,130 டன்களும் (10.1 சதவிகிதம்) மறு சுழற்சி செய்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்