TNPSC Thervupettagam

மின்னணு நிதிநிலை அறிக்கை (இ-பட்ஜெட்) – தமிழ்நாடு

August 16 , 2021 1104 days 551 0
  • தேர்தலில் வெற்றி பெற்ற பிறகான தி.மு.க அரசின் முதல் பட்ஜெட்டினை (நிதிநிலை அறிக்கை) நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் சமர்ப்பித்தார்.
  • ஒரு மாநிலம் காகிதமில்லாத வகையிலான நிதி நிலை அறிக்கையினைத் தாக்கல் செய்வது இந்தியாவிலேயே இதுதான் முதல்முறையாகும்.
  • 2021-22 ஆம் ஆண்டிற்கான வருவாய்ப் பற்றாக்குறையானது யதார்த்தமற்ற வகையில் வழக்கமான நிலைக்கு மாறான இடைக்கால பட்ஜெட் மதிப்பீடான 41,417.30 கோடி ரூபாயிலிருந்து திருத்தி அமைக்கப்பட்ட பட்ஜெட் மதிப்பீட்டில் 58,692.68 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப் படுகின்றது.
  • மாநிலத்திலுள்ள காடுகள் மற்றும் மரங்களின் மொத்தப் பரப்பளவை 33% ஆக அதிகரிப்பதற்கான பசுமை தமிழகத் திட்டத்தினை திரு. ராஜன் அறிவித்தார்.
  • மேலும் பருவநிலை மாற்ற ஏற்பு மற்றும் தணிப்பு நடவடிக்கைகள் மீது ஈடுபாடு செலுத்தும் வகையிலான தமிழ்நாடு பருவநிலை மாற்றத் திட்டத்தினையும் அவர் தொடங்கி வைத்தார்.
  • இத்திட்டத்திற்காக 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • சுய உதவிக் குழுக்கள் மற்றும் கூட்டுறவுக் கடன் வழங்கும் சங்கங்கள் செலுத்த வேண்டிய 2,756 கோடி ரூபாய் கடனையும் தள்ளுபடி செய்வதாக அரசு அறிவித்து உள்ளது.
  • 2021-22 ஆம் ஆண்டில் தமிழ்நாடு இதுவரையில் 36,000 கோடி ரூபாய் கடன் பெற்று உள்ளது.
  • கடன் பெறுதலில் மற்ற மாநிலங்களிடையே தமிழகம் முதல் இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்