“மின்னணு மண்” அல்லது eSoil எனப்படும் மின்சாரம் கடத்தும் திறன் கொண்ட வளர்ப்பு ஊடகத்தைப் பயன்படுத்தி மண்ணற்றத் தோட்டக்கலை அல்லது நீரியல் சார்ந்த தோட்டக் கலையின்புதிய முறை அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
eSoil என்பது தாவரங்களின் வேர் அமைப்பு மற்றும் வளர்ச்சி சூழலை மின்சாரம் மூலம் தூண்டக்கூடிய ஒரு குறையாற்றல் கொண்ட உயிரி மின்னணு வளர்ச்சி தளம் ஆகும்.
இந்தப் புதிய வளர்ச்சி தளம் ஆனது, சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்தது என்பதோடு செல்லுலோஸ் மற்றும் PEDOT எனப்படும் கடத்தும் திறன் கொண்ட பாலிமரில் (பலபடிச் சேர்மம்) இருந்து பெறப்படுகிறது.
அதிக மின்னழுத்தம் மற்றும் மக்காதப் பொருட்களின் பயன்பாடு அவசியமாக உள்ள முந்தைய முறைகளுக்கான குறைந்த ஆற்றல் கொண்ட, பாதுகாப்பான மாற்று முறையை இது வழங்குகிறது.
eSoil குறைந்த ஆற்றலைப் பயன்படுத்துகிறது மற்றும் வளங்களின் நுகர்வினைக் குறைக்கிறது.
இதன் தூண்டுதல் பொருள் ஒரு கரிம கலப்பு அயனி மின்னணு கடத்தி ஆகும்.
பார்லி நாற்றுகளின் வேர்களை 15 நாட்களுக்கு மின்னியல் மூலமாக தூண்டிய போது, அவை eSoil ஐப் பயன்படுத்தி 50% வளர்ச்சியைக் கண்டது.