TNPSC Thervupettagam

மின்னணு மாற்றத்தகு கிடங்கு ரசீதுகளுக்கான கடன் உத்தரவாதத் திட்டம்

February 22 , 2025 10 hrs 0 min 22 0
  • மின்னணு மாற்றத்தகு கிடங்கு ரசீது அடிப்படையிலான இணையீட்டு சார் நிதியுதவி மீதான (CGS-NPF) ஒரு கடன் உத்தரவாதத் திட்டத்தினை மத்திய அரசு அறிமுகப்படுத்தி யுள்ளது.
  • இந்தத் திட்டம் ஆனது, அறுவடைக்குப் பின்னதாக என மின்னணு மாற்றத்தகு கிடங்கு ரசீதுகளை (e-NWR) கொண்டு விவசாயிகள் பெறும் கடனுக்காக 1,000 கோடி ரூபாய் நிதியை வழங்குகிறது.
  • கிடங்கு மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை ஆணையத்தின் (WDRA) அங்கீகாரம் பெற்ற சில கிடங்குகளில் அப்பொருட்களை இருப்பு வைத்த பிறகு விவசாயிகள் அதற்கான கடன்களைப் பெறுவார்கள்.
  • 3 லட்சம் ரூபாய் வரையிலான கடன்களுக்கு 85% உத்தரவாதம் அளிக்கப்படும்.
  • சிறு மற்றும் குறு விவசாயிகள்/பெண்கள்/SC/ST/PwD ஆகியோருக்கு 3 முதல் 75 லட்சம் ரூபாய் வரையிலான கடனுக்கு 80% உத்தரவாதம் அளிக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்