மின்னணு முறையிலான ரசீது அமைப்பு
April 30 , 2019
2038 days
616
- மின்னணு முறையிலான ரசீது என்பது சரக்குகள் போக்குவரத்தின் உரிமையாளரால் கொண்டு செல்லப்படும் ஒரு தேவையான ஆவணத்தின் மின்னணு வடிவமாகும்.
- அனுப்பப்பட்ட சரக்கின் மொத்த மதிப்பு ரூ. 50 ஆயிரத்திற்கும் மேல் இருப்பின் இந்த ரசீது உருவாக்கப்பட வேண்டும்.
- இந்திய நிதி அமைச்சகமானது மின்னணு முறையிலான ரசீது அமைப்பில் சில மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
- இந்த மின்னணு முறையிலான ரசீது அமைப்பானது சரக்குகள் அனுப்பப் படுவதற்கு முன்னதாக ஏற்படுத்த வேண்டும்.
- இது சரக்குகள், சரக்கு அனுப்புநர், பெறுபவர் மற்றும் சரக்கு கொண்டு செல்பவர் ஆகியோரைப் பற்றிய விவரங்களைக் கொண்டிருக்க வேண்டும்.
- இந்த மின்னணு முறையிலான ரசீதை அளிக்கத் தவறினால் ரூ.10,000 அபராதமோ அல்லது வரி ஏய்ப்புத் தொகையோ அவற்றில் எது பெரியதோ அது வசூலிக்கப்படும்.
Post Views:
616