TNPSC Thervupettagam

மின்னணுக் கழிவு அறிக்கை

January 24 , 2021 1406 days 723 0
  • இது மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சமீபத்திய ஒரு அறிக்கையாகும்.
  • 2018-19 ஆம் ஆண்டில் நாட்டில் உற்பத்தி செய்யப் பட்டதாக மதிப்பிடப்பட்ட மின்னணுக் கழிவுகளில் வெறும் 10 சதவீதத்தையும், 2017-18 ஆம் ஆண்டில் உற்பத்தி செய்யப் பட்டவற்றில் வெறும் 3.5 சதவீதத்தையும் இந்தியா சேகரித்துள்ளது.
  • இந்தியா 2017-18 ஆம் ஆண்டில் 708,445 டன் மின்னணுக் கழிவுகளையும், 2018-19 ஆம் ஆண்டில்  771,215 டன் மின்னணுக் கழிவுகளையும் உற்பத்தி செய்துள்ளது.
  • 2019-20 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 32 சதவீதம் உயர்ந்து 1,014,961 டன்களாக உள்ளது.
  • மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமானது மின்னணுக் கழிவு மேலாண்மை விதிகள், 2016 என்ற விதிகளை வகுத்துள்ளது.
  • இது விரிவாக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பின் ஒரு பகுதியாக பழைய, பயன்படுத்த இயலாத மின்னணு தயாரிப்புகளைச் சேகரிப்பதற்கும் சேர்த்து உற்பத்தியாளர்களைப் பொறுப்பேற்க வைக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்