TNPSC Thervupettagam

மின்னணுப் பழுதுபார்ப்புத் துறைக்கான சோதனைத் திட்டம்

June 6 , 2023 413 days 255 0
  • உலகளாவிய மின்னணுப் பழுதுபார்ப்புத் துறையில் 20% பங்கினைக் கைப்பற்றுவதை ஒரு நோக்கமாகக் கொண்ட 2 மாத கால சோதனைத் திட்டத்தை அரசாங்கம் தொடங்கி உள்ளது.
  • இது சுங்கம் மற்றும் மின்னணுக் கழிவு விதிகளை தளர்த்துவதன் மூலமும், பிற பிராந்தியங்களில் இருந்து கொண்டு வரப்படும் நுகர்வோர் மின்னணு மற்றும் தொலைத் தொடர்பு உபகரணங்களைப் பழுதுபார்ப்பதற்கு இந்திய நிறுவனங்களை அனுமதிப்பதன் மூலமும் மேற்கொள்ளப் படுகிறது.
  • இந்தியாவை உலகின் உலகளாவியப் பழுதுபார்ப்பு மையமாக மாற்றுவதற்கான முதல் படியாக இது கருதப்படுகிறது.
  • பழுதுபார்ப்புச் சேவைகளைப் பொறுத்தவரையில், இந்தியாவானது சீனாவை விட 57% அளவினையும் மலேசியாவை விட 26% அளவில் குறைவான செலவின வாய்ப்பினையும்  கொண்டுள்ளது.
  • தற்போது வரை, பழுதுபார்ப்புச் சேவைகள் மூலம் இந்தியா பெறும் வருவாய் சுமார் 350 மில்லியன் டாலர் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்