மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியானது 29.1 பில்லியன் டாலர் மதிப்பில் ஒரு இடம் முன்னேறி இந்தியாவின் ஐந்தாவது பெரிய ஏற்றுமதிப் பிரிவாக மாறியுள்ளது.
இது 2024 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதியன்று நிறைவடைந்த நிதியாண்டில் 27.8 பில்லியன் டாலர் மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட மருந்துகள் மற்றும் மருந்துப் பொருட்களின் ஏற்றுமதியினை விஞ்சியுள்ளது.
மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியானது 24 சதவீதம் வளர்ச்சியடைந்தது. இது 2023 ஆம் நிதியாண்டில் 23.6 பில்லியன் டாலர் அதிகமாகும்.
கடந்த ஆண்டை விட சுமார் 38 சதவீதம் அதிகரித்து 15.5 பில்லியன் டாலர்களை எட்டிய கைபேசி ஏற்றுமதியானது, மொத்த மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் 53 சதவீதம் பங்கினைக் கொண்டுள்ளது.