மின்னல் மற்றும் கதிர்வீச்சு மண்டலங்களுக்கு இடையிலான தொடர்பு
March 6 , 2025 27 days 74 0
மின்னலால் உருவாகும் சில மின்காந்த அலைகள் ஆனது எலக்ட்ரான் பொழிவுகளைத் தூண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
உள் கதிர்வீச்சு மண்டலமானது, பூமியிலிருந்து சுமார் 621 மைல்கள் (1000 கிலோமீட்டர்) உயரத்தில் உள்ளன.
இது எலக்ட்ரான்கள் மற்றும் உயர் ஆற்றல் புரோட்டான்களால் ஆன, காலப்போக்கில் நிலை பெறும் மண்டலமாகும்.
மின்னல் என்பது இடியுடன் கூடிய மழைப் பொழிவின் போது வானத்தை ஒளிரச் செய்யும் பெரிய மின்காந்த ஓட்டமாகும்.
அவை உண்மையில் மின்னலால் உருவாக்கப்பட்ட வளிமண்டல இடையூறுகளான மின்காந்த அலைகளை உருவாக்கக் கூடியவை.
புவி காந்தப் புயல்கள் என்பது பூமிக்கு அருகிலுள்ள விண்வெளி சூழலில் ஏற்படும் இடையூறுகள் ஆகும் என்பதோடு அவை பெரும்பாலும் சூரியனின் மேற்பரப்பில் உருவாகும் பெரிய வெடிப்புகளால் ஏற்படுகின்றன.
சூரியச் செயல்பாடுகள் ஆனது, பூமியின் கதிர்வீச்சு மண்டலங்களில் இடையூறுகளை ஏற்படுத்துகிறது மற்றும் அதன் உள் மண்டலங்களில் மிக அதிக ஆற்றல் கொண்ட எலக்ட்ரான்களைக் குவிக்கிறது.
பின்னர் மின்னல் உருவாக்கமானது, இந்த எலக்ட்ரான்களுடன் தொடர்பு கொள்வதால் விரைவான வெடிப்புகளை உருவாக்குகிறது.