சூரிய குடும்பத்திற்கு அப்பால் உள்ள காசியோடியா விண்மீன் குழுவில் ஒரு வெளிக்கோளை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
நம்மிடமிருந்து 21 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ள இந்த கோளானது HD 219134b என பெயரிடப்பட்டுள்ளது. சூப்பர் எர்த் என அழைக்கப்படும் இது பூமியின் நிறையை விட 5 மடங்கு அதிக நிறையுடையது.
பூமியைப் போன்று இது மிகப்பெரிய அளவிலான இரும்பு உலோகத்தை கொண்டிருக்கவில்லை. இருப்பினும் கால்சியம், அலுமினியம் ஆகியவற்றுடன் மெக்னீசியம் மற்றும் சிலிக்கானை அதிக அளவில் கொண்டுள்ளது.
இது சிவப்பிலிருந்து நீல நிறமாக மாணிக்கத்தைப் போன்றும் நீலக்கற்களைப் போன்றும் மின்னுகிறது. ஏனெனில் வெளிக்கோள்களில் பொதுவாக காணப்படுவது போல இந்த கற்களும் அலுமினியம் ஆக்சைடால் ஆனவையாகும்.