TNPSC Thervupettagam

மிமியூசெமியா சிலோனிக்

March 14 , 2023 495 days 254 0
  • மிமியூசெமியா சிலோனிகா என்பது 127 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் கடைசியாகக் காணப்பட்ட ஒரு அரிய வகை அந்துப்பூச்சி இனமாகும்.
  • இது தற்போது தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் மீண்டும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
  • ஜார்ஜ் ஹாம்ப்சன் என்பவர் 1893 ஆம் ஆண்டில் இலங்கையில் உள்ள திருகோண மலையில் மிமியூசெமியா சிலோனிகா இனத்தினைக் கண்டறிந்தார்.
  • அதன்பிறகு உலகின் எந்த நாடுகளிலும் இது கண்டறியப் படவில்லை.
  • இந்தியாவில் இந்த அந்துப்பூச்சி இனம் கண்டறியப் படுவது இதுவே முதல் முறை ஆகும்.
  • மிமியூசெமியா சிலோனிகா இனங்கள் அகரிஸ்டினே என்ற ஒரு துணைக் குடும்பத்தினையும், நாக்டியுடே என்ற குடும்பத்தினையும் சேர்ந்தது ஆகும்.
  • 2020 ஆம் ஆண்டு அகஸ்தியமலை சமூக அடிப்படையிலான பாதுகாப்பு மையத்தில் (ACCC) தளவாய் பாண்டி என்பவர் நடத்திய அந்துப்பூச்சி கணக்கெடுப்பின் போது இது இந்தியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்டது.
  • அகஸ்திய மலை சமூக அடிப்படையிலான பாதுகாப்பு மையமானது, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் (KMTR) சுற்றுச் சூழல் தாங்கு மண்டலத்தில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்