மிமியூசெமியா சிலோனிகா என்பது 127 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் கடைசியாகக் காணப்பட்ட ஒரு அரிய வகை அந்துப்பூச்சி இனமாகும்.
இது தற்போது தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் மீண்டும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
ஜார்ஜ் ஹாம்ப்சன் என்பவர் 1893 ஆம் ஆண்டில் இலங்கையில் உள்ள திருகோண மலையில் மிமியூசெமியா சிலோனிகா இனத்தினைக் கண்டறிந்தார்.
அதன்பிறகு உலகின் எந்த நாடுகளிலும் இது கண்டறியப் படவில்லை.
இந்தியாவில் இந்த அந்துப்பூச்சி இனம் கண்டறியப் படுவது இதுவே முதல் முறை ஆகும்.
மிமியூசெமியா சிலோனிகா இனங்கள் அகரிஸ்டினே என்ற ஒரு துணைக் குடும்பத்தினையும், நாக்டியுடே என்ற குடும்பத்தினையும் சேர்ந்தது ஆகும்.
2020 ஆம் ஆண்டு அகஸ்தியமலை சமூக அடிப்படையிலான பாதுகாப்பு மையத்தில் (ACCC) தளவாய் பாண்டி என்பவர் நடத்திய அந்துப்பூச்சி கணக்கெடுப்பின் போது இது இந்தியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்டது.
அகஸ்திய மலை சமூக அடிப்படையிலான பாதுகாப்பு மையமானது, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் (KMTR) சுற்றுச் சூழல் தாங்கு மண்டலத்தில் அமைந்துள்ளது.