TNPSC Thervupettagam

மியான்மரின் புதிய அதிபர் – வின் மையிண்ட்

March 31 , 2018 2430 days 793 0
  • மியான்மர் நாடாளுமன்றமானது நாட்டின் பதவி-வழி உண்மைத் தலைவரான (de facto leader)  ஆங் சாங் சூகிக்கு நெருக்கமான வின் மையிண்ட்டை மியான்மருடைய புதிய அதிபராகத் தேர்ந்தெடுத்துள்ளது.
  • மியான்மரில் அதிபர் பதவியானது நாட்டினுடைய தலைவர் (Head of state) மற்றும் அரசினுடைய தலைவர் (Head of government) பதவியாகும். மேலும் அதிபர் பதவியானது மியான்மரிய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் மாபெரும் அதிகாரத்தைக் கொண்டதாகும்.

  • எனினும் 2016 ஆண்டு ஏப்ரல்  மாதம் முதல் மியான்மரின் உண்மையான தலைவராக ஆங்சாங் சூகி இருந்து வருவதால்    வெளி செல்கின்ற டின் கியாவினுடைய செயற்பாத்திரமானது மிகவும் சடங்கு முறையிலானதாகவே (ceremonial) இருந்தது.
  • உடல் நலக் குறைவு காரணமாக அண்மையில் டின் கியாவ் அதிபர் பதவியை ராஜிநாமா செய்தார். இதனைத் தொடர்ந்து கீழவை சபாநாயகராக தனது பதவியை கடந்த வாரம் துறந்த வின் மையிண்ட்  ஆங் சாங் சூ கியினுடைய ஆளும் ஜனநாயகத்திற்கான தேசிய லீக் (National League for Democracy-NLD) கட்சி பெரும்பான்மையைக் கொண்டுள்ள நாடாளுமன்றத்தின் இரு அவையாலும் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • பெரும் போராட்டத்திற்கு பின் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற  பொதுத் தேர்தலில் ஆங் சாங்  சூகியின் கட்சி அமோக வெற்றி பெற்றது. இருப்பினும் அவருடைய மகன்கள் வெளிநாட்டு குடியுரிமை பெற்றிருப்பதால் அதிபர்    பதவியை ஆங் சாங்  சூ கியால்  ஏற்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் நாட்டின் தலைமை ஆலோசகராகப் பொறுப்பேற்றார். இதைத் தொடர்ந்து சூ கிக்கு  நெருக்கமான டின் கியா அதிபர் பதவியேற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்