April 20 , 2020
1684 days
686
- மியான்மரின் வெளவால்களில் ஆறு புதிய கரோனா வைரஸ்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
- இந்த வகையான வைரஸ்கள் கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
- இவை கோவிட் -19 வைரசிடமோ, சார்ஸ் அல்லது மெர்ஸ் எனும் மற்ற இரண்டு வகை கரோனா வைரஸ்களிடமோ நெருங்கிய தொடர்புடையவையாக காணப்பட வில்லை.
- வெளவால்களில் ஆயிரக்கணக்கான கொரோனா வைரஸ்கள் இருப்பதாக நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.
- விலங்குகள் மற்றும் மக்களிடையே உள்ள உயிரியல் சூழலில் கண்காணிப்பு நடத்தப் படும் போது ஆராய்ச்சியாளர்கள் இந்த புதிய வைரஸ்களைக் கண்டறிந்து உள்ளனர்.
- நோய்த் தொற்று பரவுதலுக்கான சூழ்நிலைகளை நன்கு புரிந்து கொள்ள இது நடத்தப் பட்டுள்ளது.
- இது PREDICT (கணிப்பு) எனப்படும் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
- ஸ்மித்சோனியனின் உலகளாவிய சுகாதாரத் திட்டத்தால் இந்த குழு உருவாக்கப் பட்டுள்ளது.
- இந்தக் கண்டுபிடிப்புகள் ப்ளொஸ் ஒன் (PLOS ONE) என்ற அறிவியல் இதழில் வெளியிடப் பட்டுள்ளன.
Post Views:
686