மியான்மர் எல்லையில் வேலி அமைக்க மத்திய அரசு 31,000 கோடி ரூபாய்க்கு ஒப்புதல் அளித்துள்ளது.
சுமார் 1,643 கிலோ மீட்டர் தொலைவிலான மியான்மர் எல்லையானது அருணாச்சலப் பிரதேசம் (520 கிமீ), நாகாலாந்து (215 கிமீ), மணிப்பூர் (398 கிமீ) மற்றும் மிசோரம் (510 கிமீ) ஆகிய மாநிலங்களின் எல்லை வழி பரவியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் ஆனது இந்த ஆண்டின் தொடக்கத்தில் மியான்மர் எல்லையில் உள்ள தடையற்ற நடமாட்டப் பகுதியினை (FMR) ரத்து செய்தது.
இது எல்லைப் பகுதிகளுக்கு அருகில் வசிக்கும் மக்கள் எந்த ஆவணமும் இல்லாமல் ஒவ்வொரு நாட்டவரும் 16 கிமீ தூரம் வரை பயணிக்க அனுமதிக்கிறது.