மியான்மர் நாட்டில் 7.7 மற்றும் 6.4 ரிக்டர் அளவிலான இரண்டு நிலநடுக்கங்கள் உடன் அடுத்தடுத்து ஏற்பட்டன.
தாய்லாந்தின் தலைநகரான பாங்காக் ஆனது பேரிடர் பாதிப்பு பகுதியாக அறிவிக்கப் பட்டுள்ளது.
மியான்மரின் இராணுவ அரசாங்கம் ஆனது, அந்நாட்டின் ஆறு பிராந்தியங்கள் மற்றும் மாநிலங்களில் அவசரகால நிலையை அறிவித்துள்ளது.
மியான்மரின் மண்டலே பகுதியில் உள்ள 90 ஆண்டுகள் பழமையான அவா பாலம் ஐராவதி ஆற்றில் இடிந்து விழுந்தது.
முன்னதாக மியான்மரில், 1930 முதல் 1956 ஆம் ஆண்டு வரையிலான காலக் கட்டத்தில் சகாயிங் பிளவு அருகே 7 அல்லது அதற்கு மேற்பட்ட ரிக்டர் அளவிலான ஆறு வலுவான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
2016 ஆம் ஆண்டில் மத்திய மியான்மரில் 6.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஆனது மூன்று பேரின் உயிரைப் பலி வாங்கியது.
மியான்மரில் பேரிடர் நிவாரணம், தேடல் மற்றும் மீட்பு உதவிகளை வழங்குவதை ஒரு நோக்கமாகக் கொண்ட அவசர நிவாரண நடவடிக்கையான 'ஆபரேஷன் பிரம்மா'வை இந்தியா தொடங்கியுள்ளது.