TNPSC Thervupettagam

மியோம்போ வனப் பாதுகாப்பு

August 14 , 2024 101 days 141 0
  • ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) மற்றும் இத்தாலிய மேம்பாட்டுக் கழகம் (AICS) ஆகியவை மியோம்போ வனப் பாதுகாப்பிற்கான இரண்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.
  • மொசாம்பிக் மற்றும் ஜிம்பாப்வே எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மியோம்போ காடுகளைப் பாதுகாப்பதற்கும் அங்கு மேற்கொள்ளப்படும் வர்த்தகத்தை எளிதாக்குவதற்குமான திட்டங்களை அவை செயல்படுத்த உள்ளன.
  • முதல் திட்டம் ஆனது, மியோம்போ காடுகளின் நிலையான ஒருங்கிணைந்த எல்லை சார் மேலாண்மை திட்டமாகும்.
  • இரண்டாவது திட்டம் ஆனது, "சிம்-மோசா வேளாண் மதிப்பு சங்கிலி மற்றும் வர்த்தக மேம்பாட்டு திட்டம்" (Zim-Moza ATDP) ஆகும்.
  • மியோம்போ என்பது வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டலப் புல்வெளிகள், புதர் நிலங்கள் மற்றும் சவானாக்கள் ஆகியவற்றைப் பெருமளவில் உள்ளடக்கிய ஒரு உயிரியல் அமைப்பாகும்.
  • இது நான்கு உயிரியல் சூழல் பகுதிகளை உள்ளடக்கியது என்பதோடு மேலும் இது மிக முக்கியமான எல்லை கடந்த ஆற்றுப் படுகைகளில் ஒன்றான கிரேட்டர் ஜாம்பேசி பகுதிகளின் வளத்தினைக் காக்கும் பொறுப்பையும் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்