16 நாடுகள் பங்குபெறும் ‘மிலன்’ எனும் பன்னாட்டு கூட்டுப்போர் பயிற்சியை இந்திய கடற்படை, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் அமைந்துள்ள போர்ட் பிளேயரில் மார்ச் 6 முதல் 13 வரை நடத்த உள்ளது.
‘கடல்களைத் தாண்டிய நட்புறவு’ (Friendship Across Seas) என்ற கருப்பொருளின் அடிப்படையில் அந்தமான் மற்றும் நிக்கோபார் கடற்படைப் பிரிவின் (Andaman and Nicobar Command) கீழ் இந்த கடல்சார் பாதுகாப்புப் போர் பயிற்சி நடத்தப்பட உள்ளது.
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் அசலான இயற்கை அழகு மற்றும் இயற்கை பாரம்பரிய செறிவை வெளிநாட்டினருக்குக் காண்பிப்பதற்காக மிலன் 2018 கூட்டுப்போர் பயிற்சி நடத்தப்படுகின்றது.
மொத்தம் 16 நாடுகள் இந்த பன்னாட்டு கூட்டுப்போர் பயிற்சியில் பங்கேற்க உள்ளன.
அவையாவன,
ஆஸ்திரேலியா, தான்சானியா, கம்போடியா, சிங்கப்பூர், நியூசிலாந்து, வியட்நாம், மியான்மர், வங்கதேசம், கென்யா, தாய்லாந்து, இலங்கை, ஓமன், மாலத்தீவுகள், மொரீசியஸ், இந்தோனேசியா, மலேசியா.
அரபிக்கடல், இந்தியப் பெருங்கடல் மற்றும் வங்கக் கடலில் அமைந்துள்ள கடலோர நாடுகளுடைய (Littoral States) கடற்படையின் கூடுகையாக இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை (biennially) நடத்தப்படும் இந்த கூட்டுப்போர் பயிற்சியானது 1995 ஆம் ஆண்டு முதன்முறையாக நடத்தப்பட்டது.