TNPSC Thervupettagam
February 27 , 2018 2465 days 734 0
  • 16 நாடுகள் பங்குபெறும் ‘மிலன்’ எனும் பன்னாட்டு கூட்டுப்போர் பயிற்சியை இந்திய கடற்படை, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் அமைந்துள்ள போர்ட் பிளேயரில் மார்ச் 6 முதல் 13 வரை நடத்த உள்ளது.
  • ‘கடல்களைத் தாண்டிய நட்புறவு’ (Friendship Across Seas) என்ற கருப்பொருளின் அடிப்படையில் அந்தமான் மற்றும் நிக்கோபார் கடற்படைப் பிரிவின் (Andaman and Nicobar Command) கீழ் இந்த கடல்சார் பாதுகாப்புப் போர் பயிற்சி நடத்தப்பட உள்ளது.
  • அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் அசலான இயற்கை அழகு மற்றும் இயற்கை பாரம்பரிய செறிவை வெளிநாட்டினருக்குக் காண்பிப்பதற்காக மிலன் 2018 கூட்டுப்போர் பயிற்சி நடத்தப்படுகின்றது.
  • மொத்தம் 16 நாடுகள் இந்த பன்னாட்டு கூட்டுப்போர் பயிற்சியில் பங்கேற்க உள்ளன.
  • அவையாவன,
    • ஆஸ்திரேலியா, தான்சானியா, கம்போடியா, சிங்கப்பூர், நியூசிலாந்து, வியட்நாம், மியான்மர், வங்கதேசம், கென்யா, தாய்லாந்து, இலங்கை, ஓமன், மாலத்தீவுகள், மொரீசியஸ், இந்தோனேசியா, மலேசியா.
  • அரபிக்கடல், இந்தியப் பெருங்கடல் மற்றும் வங்கக் கடலில் அமைந்துள்ள கடலோர நாடுகளுடைய (Littoral States) கடற்படையின் கூடுகையாக இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை (biennially) நடத்தப்படும் இந்த கூட்டுப்போர் பயிற்சியானது 1995 ஆம் ஆண்டு முதன்முறையாக நடத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்