நிர்மலா சீத்தாராமன் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் குழு மிலன் 2T – என்ற பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகளைக் கொள்முதல் செய்வதற்கு ஒப்புதல் அளித்திருக்கின்றது.
மிலன் என்பது பிரான்சில் ஃபோன்டெனாய் ஆக்ஸ் ரோசஸ் எனும் நகரை அடிப்படையாகக் கொண்ட யூரோமிசைல் (Euromissile) எனும் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஒரு நடுத்தர வகையைச் சேர்ந்த எளிதில் இடம் மாற்றும் வகையிலான பீரங்கி எதிர்ப்பு ஏவுகணை ஆகும்.
மிலன் ஆயுதக் கிடங்குகள் நீர் உட்புகாதவாறு உள்ள செலுத்துக் குழாய்களில் ஏவுகணையைக் கொண்டிருக்கின்றன.
இந்த புதிய வகை ஆயுதம் குறிப்பாக 1990 ஆம் ஆண்டுகளில் ராணுவங்களால் பயன்படுத்தப்பட்ட எதிர்வினை ஆயுதங்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் வகையில் மேம்படுத்தப்பட்டது.
மேம்படுத்தப்பட்ட 2T ஏவுகணையால் எதிர்வினை ஆயுதங்களிலும் உள்ளே நுழைய முடியும்.