மத்திய பிரதேச மாநில அரசானது பெரும் எண்ணிக்கையிலான கற்பிக்கும் திட்டமான ‘மில் பன்ச்சே மத்தியப் பிரதேசம்’ (குழுவாக படித்தல், மத்தியப் பிரதேசம்) என்னும் திட்டத்தை நடத்தியது.
கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இத்திட்டத்தின் மூலம் சமூகத்தில் உள்ள பல்வேறு பிரிவுகளிலிருந்து (மக்கள் பிரதிநிதிகள், ஊக்கப்படுத்துவோர்) மக்கள் தன்னார்வலர்களாக பங்கேற்க முடியும். மேலும் இதன் மூலம் மாணவர்களை ஊக்கப்படுத்த அறிவுசார்ந்த புத்தகங்களை படிக்கலாம்.