TNPSC Thervupettagam

மிஷன் பனியாட் – புதுதில்லி

April 17 , 2018 2285 days 744 0
  • மூன்றாம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையிலான பள்ளிக் குழந்தைகளின் கற்றல் அளவினை (learning levels) அதிகரிப்பதற்காக “மிஷன் பனியாட்” (Mission Buniyaad) எனும் திட்டத்தை டெல்லி அரசு தொடங்கியுள்ளது.
  • புதுதில்லியில் தொடக்கக் கல்வியானது (Primary education) டெல்லி மாநகராட்சி கார்ப்பரேஷனின் (Municipal Corporations of Delhi-MCDs) அதிகார வரம்பின் கீழ் உள்ளது.
  • மிஷன் பனியாட் திட்டத்தின் கீழ் மாணவர்களிடத்தில் வாசிப்பு அளவிலான மதிப்பிடல் (Reading level assessment) மேற்கொள்ளப்படும். அதன் அடிப்படையில் மாணவர்கள் சிறப்பு வகுப்புகளின் (specialised classes) சேர்க்கைக்குப்  பதிவு  செய்யப்படுவர்.
  • மிஷன் பனியாட் திட்டமானது டெல்லி மாநகராட்சிப் பள்ளிகளின் 3-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு  வரையிலான மாணவர்கள் மற்றும்  டெல்லி அரசு பள்ளிகளின் 6-ஆம் வகுப்பு   முதல் 9-ஆம்  வகுப்பு வரையிலான மாணவர்கள் ஆகியோருக்கு  ஏப்ரல் முதல் ஜூன் வரை செயல்படுத்தப்படும்.
  • கடந்த மாதம் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கழகம் (National Council of Educational Research and Training - NCERT) 2017 ஆம் ஆண்டிற்கான தேசிய சாதனையாளர் கணக்கெடுப்பின் (National Achievement Survey)  தரவுகளை வெளியிட்டதனைத்  தொடர்ந்து இத்திட்டம் புதுதில்லியில் தொடங்கப்பட்டுள்ளது.
  • தில்லி அரசுப் பள்ளிகளில் 3 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் குறைந்த கற்றல் அளவினைக் (lowest learning levels) கொண்டுள்ளதாக இந்தக் கணக்கெடுப்பு கண்டறிந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்