பயணிகள் இரயில் மற்றும் சரக்கு இரயிலின் சராசரி வேகத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்ட மிஷன் ராப்தார் (Mission Raftaar) தொடக்கத்தின் மீது மத்திய இரயில்வே அமைச்சகமானது ஒரு நாள் பயிற்சிப் பட்டறையை புது தில்லியில் நடத்தியுள்ளது.
5 ஆண்டுகாலத்தில் பயணிகள் இரயில்களின் சராசரி வேகத்தை மணிக்கு 25 கிலோ மீட்டர் வீதம் அதிகரிப்பதும், சரக்கு இரயில்களின் சராசரி வேகத்தை இருமடங்காக்குவதும் இத்திட்டத்தின் நோக்கங்களாகும்.
சாலைவழிப் போக்குவரத்து மற்றும் விமானவழிப் போக்குவரத்து போன்ற போக்குவரத்து முறைகளிலிருந்து வரும் அதிகரித்த போட்டியுடன் ஈடுகொடுக்க மத்திய இரயில்வே அமைச்சகத்தினுடைய உத்திகளின் ஒருபகுதியாக இத்திட்டம் தொடங்கப்பட்டது.
மிஷன் ராப்தார் திட்டத்தின் கீழ் இரயில்களின் வேகத்தை அதிகரிக்க முதன்மை இரயில்வே வழித்தடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.