TNPSC Thervupettagam

மிஷன் ராப்டார்

June 4 , 2018 2240 days 665 0
  • பயணிகள் இரயில் மற்றும் சரக்கு இரயிலின் சராசரி வேகத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்ட மிஷன் ராப்தார் (Mission Raftaar) தொடக்கத்தின் மீது மத்திய இரயில்வே அமைச்சகமானது ஒரு நாள் பயிற்சிப் பட்டறையை புது தில்லியில் நடத்தியுள்ளது.
  • 5 ஆண்டுகாலத்தில் பயணிகள் இரயில்களின் சராசரி வேகத்தை மணிக்கு 25 கிலோ மீட்டர் வீதம் அதிகரிப்பதும், சரக்கு இரயில்களின் சராசரி வேகத்தை இருமடங்காக்குவதும் இத்திட்டத்தின் நோக்கங்களாகும்.
  • சாலைவழிப் போக்குவரத்து மற்றும் விமானவழிப் போக்குவரத்து போன்ற போக்குவரத்து முறைகளிலிருந்து வரும் அதிகரித்த போட்டியுடன் ஈடுகொடுக்க மத்திய இரயில்வே அமைச்சகத்தினுடைய உத்திகளின் ஒருபகுதியாக இத்திட்டம் தொடங்கப்பட்டது.
  • மிஷன் ராப்தார் திட்டத்தின் கீழ் இரயில்களின் வேகத்தை அதிகரிக்க முதன்மை இரயில்வே வழித்தடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
  • தங்க நாற்கர பாதையில் அமைந்துள்ள 6 வழித்தடங்களாவன.
    • டெல்லி – மும்பை
    • டெல்லி – ஹவுரா
    • ஹவுரா – சென்னை
    • சென்னை – மும்பை
    • டெல்லி – சென்னை
    • ஹவுரா – மும்பை

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்