TNPSC Thervupettagam

“மிஷன் ரைஸ்”

October 8 , 2017 2605 days 862 0
  • கேரளாவில் "குடும்பஸ்ரீ" திட்டத்தின் கீழ் “மிஷன் ரைஸ்” எனும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
  • கேரளாவிலுள்ள வயநாட்டில் அழியும் நிலையிலுள்ள ஏழு உள்நாட்டு அரிசி விதைகளை பாதுகாத்து, உற்பத்தி செய்து பெருக்குவதே இத்திட்டத்தின் நோக்கம் ஆகும்.
  • கூட்டு பொறுப்பு குழுக்கள் (Joint Liability Groups) மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
  • கந்தகசாலா, ஜீரகசாலா, பல்தோண்டி, செநெல்லு, ரக்தஷாலி, வெளியன், அடுக்கன் ஆகியவை அந்த ஏழு வகைகளாகும்.
  • உயிரிகலவை உருண்டை (BioSlurry Pellet Method ) முறை எனும் புத்தாக்க அரிசி உற்பத்தி முறை இதற்காகப் பயன்படுத்தப்படும்.
கூட்டு பொறுப்பு குழுக்கள்
  • தனிநபர் அடிப்படையில் அல்லது குழு அமைப்பு முறை மூலம் வங்கிகளிடமிருந்து கடன் பெறுவதற்காக 4 முதல் 10 தனிநபர்கள் ஒன்று சேர்ந்து அமைக்கப்படும் ஓர் முறைசாரா குழுவே கூட்டு பொறுப்புக் குழு எனப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்