மும்பையில் நடைபெற்ற 55-வது பெமினா மிஸ் இந்தியா- 2018-ல் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனுகீர்த்தி மிஸ் இந்தியாவாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
உலக அழகி 2017-க்கான பட்டம் வென்ற மனுசி சில்லர், அனுகீர்த்திக்கு மகுடம் சூட்டினார்.
ஹரியானாவைச் சேர்ந்த மீனாட்சி சௌத்ரி இரண்டாவது இடத்தையும், ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்ரேயா ராவ் காமவரப்பு மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
இதற்கான நீதிபதிக் குழுவானது மட்டைப் பந்து வீரர் இர்பான் பதான், K.L.ராகுல் மற்றும் பாலிவுட் நடிகர்கள் மலைகா அரோரா, பாபி டியோல் மற்றும் குனால் கபூர் ஆகியோரைக் கொண்டது.
மேலும், நீதிபதிக் குழுவில்
உலக அழகி 2017-மனுசி சில்லர்,
ஐக்கிய கண்ட அழகி 2017-சனா டுவா மற்றும்
கண்டங்களுக்கிடையேயான அழகி 2017- பிரியங்கா குமாரி ஆகியவர்கள் அவர்களை பின்வருபவர்களுக்கு மகுடம் சூட்டினர்.
இரண்டாமிடம் பிடித்த இரண்டு நபர்கள் சர்வதேச உலக அழகி 2018 மற்றும் ஐக்கிய கண்ட அழகி 2018-ல் தங்களது நாடுகளின் பிரதிநிதிகளாகப் பங்கேற்பார்கள்.