ஜப்பானின் டோக்கியோ டோம் சிட்டி அரங்கில் நடைபெற்ற மிஸ் இன்டர்நேஷனல் – 2017 போட்டியில் இந்தோனேசியாவின் கெவின் லில்லியானா 2017-ஆம் ஆண்டிற்கான மிஸ் இண்டர்நேஷனல் அழகியாக முடி சூட்டப்பட்டுள்ளார்.
இவர் 2016ஆம் ஆண்டில் மிஸ் இண்டர்நேஷனல் அழகியான பிலிப்பைன்ஸ் நாட்டின் கைலி வெர்சோசாவினால் கிரீடம் சூடப்பட்டார். இவர் மிஸ் இண்டர்நேஷனல் பட்டம் பெறும் முதல் இந்தோனேசியராவார்.
மிஸ் இண்டர்நேஷனல் என்பது டோக்கியோவில் நடத்தப்பெறும் சர்வதேச அழகிகளுக்கான அலங்கார அணிவகுப்பாகும் (pageant). இது சர்வதேச கலாச்சார சங்கத்தால் (International Culture Association) நடத்தப்படுகிறது.
இந்த அலங்கார அணிவகுப்பானது முதன் முதலில் 1960-ல் நடத்தப்பட்டது. உலக அமைதி, நட்புணர்வு, நல்லெண்ணம் போன்றவற்றை ஊக்குவிப்பதே இந்த மிஸ் இண்டர்நேஷனல் சர்வதேச அழகிகளுக்கான அலங்கார அணிவகுப்பின் முக்கிய நோக்கங்களாகும்.