TNPSC Thervupettagam
November 20 , 2017 2434 days 803 0
  • இந்தியாவின் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த மனுஷி சில்லர் 2017-ஆம் ஆண்டிற்கான உலக அழகியாக (Miss World 2017) வாகை சூட்டப்பட்டுள்ளார்.
  • சீனாவின் சன்யா நகரில் நடைபெற்ற மாபெரும் இறுதி போட்டியில் வெற்றி பெற்ற இவருக்கு 2016-ஆம் ஆண்டின் உலக அழகியான போர்டோ ரிகாவின் ஸ்டெபானி டெல் வல்லே தனது கிரிடத்தை சூட்டினார்.
  • மனுஷி சில்லர் உலக அழகிப் பட்டத்தை பெறும் ஆறாவது இந்தியப் பெண்ணாவார்.
  • 2000 ஆம் ஆண்டு பிரியங்கா சோப்ரா உலக அழகி பட்டத்தை பெற்றதை அடுத்து அடுத்த 16 ஆண்டுகள் கழித்து இந்தியர் ஒருவர் பெறும் முதல் உலக அழகி பட்டம் இதுவாகும்.
  • பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 108 பெண்கள் கலந்து கொண்ட இந்த அழகிப்போட்டி அணி வகுப்பில் மிஸ் இந்தியாவான  மனுஷி சில்லர் முதலிடத்தையும், மிஸ் இங்கிலாந்தான  ஸ்டெப்ஹானி ஹில் இரண்டாவது இடத்தையும், மிஸ் மெக்ஸிகோவான ஆண்டிரியா மெஜா மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.
  • இதற்குமுன் உலக அழகிப் பட்டம் வென்ற ஐந்து இந்திய அழகிகள்
    • ரீட்டா ப்ரியா- 1966
    • ஐஸ்வர்யா ராய்- 1994
    • டயானா ஹெய்டன் -1997
    • யுக்தா முகி-1999
    • பிரியங்கா சோப்ரா-2000

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்