சூரியன் எனப் பொருள்படும் “மிஹிர்” (Mihir) என்ற உயர் செயல்பாட்டு கணினி அமைப்பை (High performance computer system - HPC) மத்திய புவி அமைச்சகமானது நொய்டாவிலுள்ள தேசிய மத்திய வரம்பு வானிலை முன்னறிவிப்பு மையத்தில் நிறுவியுள்ளது (National centre for medium range weather forecasting).
இந்த உயர் செயல்பாட்டு கணினி அமைப்பானது, உச்ச செயல்திறன் மற்றும் செயல்பாட்டளவில் இந்தியாவின் மிகப்பெரிய உயர் செயல்பாட்டு கணினி வசதியாகும்.
மொத்தமாக8 பெடா பிளாப்புகளுடைய HPC வசதிகள் இரு பிரிவாக மத்திய புவி அமைச்சகத்தின் இரு நிறுவனங்களில் அமைக்கப்பட்டுள்ளது.
‘பிரத்யுஷ்’ எனப் பெயரிடப்பட்ட 0 பெடா பிளாப்புகளுடைய HPC வசதி புனேவிலுள்ள IITM (Indian Institute of Tropical Meteorology) மையத்தில் நிறுவப்பட்டுள்ளது.
8 பெடா பிளாப்புகளுடைய HPC வசதி நொய்டாவின் NCMRWF மையத்தில் நிறுவப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் செயல்படும் அதிவேக கணிணிகளின் பட்டியலில் முன்னணி 500 இடங்களில் 368-வது இடத்திலுள்ள இந்திய அதிவேக கணிணிகள், இவற்றின் வருகையின் மூலம் முதல் 30 இடத்துக்கு முன்னேறும்.