TNPSC Thervupettagam

மீகாங் நதி தகராறு

May 4 , 2020 1574 days 743 0
  • சமீபத்தைய ஒரு ஆய்வின்படி, மீகாங் ஆறின் மீதான சீனாவின் நடவடிக்கைகள் நீண்ட காலமாக சர்ச்சைக்குரியதாக அமைந்துள்ளது.
  • அமெரிக்க நிதியுதவி பெற்ற இந்த ஆய்வு புவியின் மீதான கண்கள் (Eyes on Earth) என்ற ஒரு ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை நிறுவனத்தால் மேற்கொள்ளப் பட்டது.
  • இந்த அறிக்கை ஐ.நா ஆதரவுடைய நீடித்த வளர்ச்சி கொண்ட நிலையான உள்கட்டமைப்பு கூட்டாண்மை மற்றும் கடைநிலை மீகாங் நதி முன்முயற்சி ஆகியவற்றால் இணைந்து வெளியிடப் பட்டுள்ளது.
  • இது அமெரிக்காவுடன் கம்போடியா, லாவோஸ், மியான்மர், தாய்லாந்து மற்றும் வியட்நாமும் இணைந்த ஒரு பன்னாட்டுக் கூட்டாகும்.
  • மீகாங் நதி ஆறு நாடுகளின் வழியே பாய்கிறது.
  • லங்காங் நதி என்றும் அழைக்கப்படும் இது சீனாவிலிருந்துத் தொடங்குகிறது.
  • இது கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து மற்றும் மியான்மர் போன்ற நாடுகளில் பாய்கிறது.
  • இது வியட்நாம் வழியாக தென் சீனக் கடலைச் சேர்கிறது.
  • இந்த நதி தென்கிழக்கு ஆசிய நாடுகளின் உயிர்நாடியாக விளங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்