TNPSC Thervupettagam

மீத்தேன் உமிழ்விற்கான புதிய மூலம்

July 22 , 2023 493 days 257 0
  • ஆர்க்டிக் பகுதிகளில் பருவநிலை மாற்றம் காரணமாக நிலத்தடி நீரூற்றுகளிருந்து மீத்தேன் வெளியிடப் படுகின்றன.
  • பனிப்பாறைகள் உருகி வருவதனால் இந்த மீத்தேன் நிறைந்த நீரூற்றுகள் வெளிப்படத் தொடங்கியுள்ளன.
  • ஆர்க்டிக் பகுதிகளில் உள்ள தீவுத்திரள் பகுதியான ஸ்வால்பார்ட் எனுமிடத்தில் உள்ள நிலத்தடி நீரூற்றுகள் சுமார் 2,000 டன்களுக்கு மேலான அளவில் மீத்தேன் வாயுவினை வெளியிடுகின்றன.
  • இந்த எண்ணிக்கையானது, நார்வே நாட்டில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு ஆற்றல் துறையில் இருந்து ஓராண்டில் வெளியேற்றப் படும் மீத்தேன் உமிழ்வின் 10 சதவீதத்திற்குச் சமமாக உள்ளது.
  • பசுமை இல்ல வாயுவான மீத்தேன், 20 ஆண்டு கால அளவில் கார்பன் டை ஆக்சைடை விட 84 மடங்கு அதிகத் தாக்கத்தினை ஏற்படுத்தும் திறன் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்