உலகளாவிய மீத்தேன் மதிப்பீடானது காலநிலை மற்றும் தூயக்காற்று மீதான கூட்டணி (Climate and Clean Air Coalition – CCAC) மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் சுற்றுச்சூழல் திட்டம் (United Nations Environment Programme – UNEP) ஆகியவற்றால் இன்று வெளியிடப் பட்டது.
மனிதனால் ஏற்படும் மீத்தேன் உமிழ்வினை இந்த பத்தாண்டுகளில் 45% வரை குறைக்க இயலும் என இந்த அறிக்கை கூறுகிறது.
இதனால் 2045 ஆம் ஆண்டுக்குள் உலக வெப்பமயமாதலானது 0.3oC வரை குறைக்கப் படும்.
மேலும் இது உலகளாவிய வெப்பநிலை உயர்வினை 1.5oC எனும் இலக்கு வரம்பினுள் வைத்திருப்பதற்கான பாரீஸ் காலநிலை உடன்படிக்கையின் ஒரு இலக்குடன் ஒத்திருக்கிறது.