TNPSC Thervupettagam

மீத்தேன் ஏரி - சனிக் கிரகம்

April 19 , 2019 1920 days 618 0
  • சனிக் கிரகத்தின் மிகப்பெரிய நிலவு டைட்டன் என்றழைக்கப்படுகின்றது.
  • 100 மீட்டர்களுக்கும் அதிகமான ஆழத்தைக் கொண்ட திரவ நிலையில் உள்ள சிறிய ஏரிகளைச் சனிக் கிரகம் கொண்டிருக்கின்றது.
  • அறிவியலாளர்களைப் பொறுத்த மட்டில் டைட்டன் கிரகத்தின் அறியப்பட்ட இரண்டாவது மிகப்பெரிய திரவநிலை அமைப்பான லிஜியா மேர் மீத்தேனால் நிரம்பியுள்ளது.
  • இந்த தகவல் நாசாவின் காசினி விண்கலத்தால் அளிக்கப்பட்டு இருக்கின்றது.
  • சூரியக் குடும்பத்தில் சனிக் கிரகமும் புவியும் தரையின் மீது திரவநிலை அமைப்புகளை நிலையாகக் கொண்டிருக்கும் இரண்டு இடங்களாகும்.
  • டைட்டன் 5150 கிலோமீட்டர் விட்டத்தைக் கொண்டுள்ளது.
  • இது சூரியக் குடும்பத்தின் இரண்டாவது மிகப்பெரிய நிலவு ஆகும்.
  • சூரியக் குடும்பத்தில் வியாழன் கிரகத்தின் கானிமேடு என்பதே மிகப்பெரிய நிலவு ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்