TNPSC Thervupettagam
March 11 , 2024 130 days 225 0
  • உலக அளவிலான மீத்தேன் உமிழ்வினைக் கண்காணித்து அளவிடும் மீத்தேன் சாட் எனும் செயற்கைக்கோள் சமீபத்தில் விண்ணில் ஏவப்பட்டது.
  • அமெரிக்காவில் உள்ள ஓர் இலாப நோக்கற்ற சுற்றுச்சூழல் ஆலோசனை வழங்கீட்டுக் குழுவான சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிதியம் (EDF) ஆனது மீத்தேன்சாட் உருவாக்கத்தின் பின்னணியில் உள்ள நிறுவனம் ஆகும்.
  • ஒரு நாளைக்கு சுமார் 15 முறை பூமியைச் சுற்றி வரும் மீத்தேன்சாட் எண்ணெய் மற்றும் எரிவாயு பிரிவுகளைக் கண்காணிக்கும்.
  • "எங்கிருந்து எவ்வளவு மீத்தேன் வெளி வருகிறது எனவும், அதற்கு எது காரணம் என்றும், அந்த உமிழ்வுகள் காலப் போக்கில் அதிகமாகின்றனவா அல்லது குறைகின்றனவா" என்று ஆராய்ந்து தகவல் அளிக்கும் இது ஒரு பெரிய அளவிலான தரவை உருவாக்கும்.
  • மீத்தேன் ஒரு கண்ணுக்குப் புலப்படாத ஆனால் வலுவான பசுமை இல்ல வாயுவாகும். மேலும் கார்பன் டை ஆக்சைடுக்குப் பிறகு புவி வெப்பமடைதலில் இரண்டாவது பெரிய பங்கினைக் கொண்டுள்ள வாயுவாகும்.
  • தொழில்துறைப் புரட்சிக்குப் பின்னர் பதிவான 30 சதவீத உலக வெப்பமயமாதலுக்கு இதுவே முக்கியக் காரணமாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்