2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மீனவர் சமூகம் குறித்த பத்தாண்டுக் கணக்கெடுப்பு தொடங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசானது மாநிலத்தில் கடலோர மீனவச் சமூகத்தின் சமூக - பொருளாதார நிலை குறித்த இதே வகையைச் சேர்ந்த ஒரு முதலாவது ஆய்வையும் மேற்கொள்ள இருக்கின்றது.
இந்தக் கணக்கெடுப்பானது கடலோர மீனவக் கிராமங்கள், கடல் மீன் பிடித் தொழிலை சார்ந்து வாழும் மக்கள், அவர்களின் தொழில்சார் அமைப்பு ஆகியவற்றை அடையாளம் காண்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தமிழ்நாடு மாநிலமானது நாட்டின் இரண்டாவது நீளமான கடல் எல்லையைக் கொண்டுள்ளது. இது 1076 கிலோ மீட்டர் தொலைவுள்ள கடல் எல்லையைக் கொண்டுள்ளது. இது 13 கடலோர மாவட்டங்களை உள்ளடக்கியுள்ளது.
நாட்டின் மொத்தக் கடல் மீன் உற்பத்தியில் தமிழ்நாடு மாநிலம் 4வது இடத்தில் உள்ளது.
மீன்பிடித் தடைக் காலத்தின் போது, தமிழ்நாடு மாநிலமானது ஒவ்வொரு மீனவக் குடும்பத்திற்கும் 5,000 ரூபாயை நிதியுதவியாக அளிக்கின்றது.