மீனவர்கள் மற்றும் மீன் பண்ணையாளர்கள் தங்களது மீன்கள் மற்றும் பிற கடல்சார் பிடிப்புகளை (Marine catch) நேரடியாக நுகர்வோர்களுக்கு விற்பனை செய்வதற்கு உதவுவதற்காக மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் (CMFRI- Central Marine Fisheries Research Institute) ஒரு பல் விற்பனையாளர் மின் வர்த்தக இணையவாயில் ஒன்றையும் (Multi-vendor e-commerce website), கைபேசி செயலி ஒன்றையும் கண்டுபிடித்துள்ளது.
marinefishsales.com என்ற இணையவாயிலையும், marine fish sales என்ற கைபேசி செயலியையும் கடலோர மீன்பிடி சமூகத்தின் வருவாயை அதிகரிப்பதற்கான ஒரு பகுதியாக பருவநிலை மீள்திறனுடைய வேளாண்மை மீதான தேசிய புதுமையாக்கல் திட்டத்தின் கீழ் (National Innovations on Climate Resilient Agriculture -NICRA) இவை இரண்டையும் CMFRI வடிவமைத்துள்ளது.
ஆன்லைன் வழியே தங்களது மீன்களையும், கடல்சார் பிடிப்புகளையும் விற்க விரும்பும் மீனவர்கள் மற்றும் மீன் வளர்ப்பு பண்ணையாளர்கள் ஒரு சுயஉதவிக் குழுவை ஏற்படுத்தி இந்த இணையவாயிலில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் இவற்றின் வழியிலான விற்பனையையும், விற்பனையாளர் தரவுகளையும் கண்காணிக்கும்.