மீன் பிடி மற்றும் மீன் வளர்ப்பு மேம்பாட்டு நிதி (FAIDF)
October 30 , 2018 2220 days 729 0
பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவானது 2022 ஆம் ஆண்டில் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவதற்காக (Fisheries and Aquaculture Infrastructure Development Fund) FAIDF எனும் மீன்பிடித் துறை மற்றும் மீன்வளர்ப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி என்ற நிதியை உருவாக்க ஒப்புதல் அளித்துள்ளது.
தற்போதைய உற்பத்தியான 11.4 மில்லியன் டன்களில் இருந்து மீன் உற்பத்தியை கீழ்க்காணும் உற்பத்தி இலக்கிற்கு அதிகரிப்பதே இதன் முக்கிய குறிக்கோளாகும். அவையாவன
2020 ல் 15 மில்லியன் டன்கள் மீன் உற்பத்தி
2022-23 ஆண்டுகளில் 20 மில்லியன் டன்கள் மீன் உற்பத்தி
இந்த இலக்கை அடையும் குறிக்கோளானது நீலப் புரட்சியின் கீழ் அமைக்கப்பட்டது.
இந்த நிதிக்கான முதன்மை நிறுவனங்களாக வேளாண் மற்றும் கிராம மேம்பாட்டுக்கான தேசிய வங்கி (நபார்டு) தேசிய கூட்டுறவு அபிவிருத்திக் கழகம் (NCDC - National Cooperatives Development Corporation) மற்றும் பட்டியலிடப்பட்ட வங்கிகள் ஆகியவை செயல்படும்.
இந்த நிதியானது முதன்மை கடன் நிறுவனங்கள் மூலம் (NLE - Nodal Loaning Entities) திரட்டப்படுகிறது.