TNPSC Thervupettagam

மீன்களில் ஃபிலுவோக்செடைன் தாக்கங்கள்

September 17 , 2024 67 days 116 0
  • ஃபிலுவோக்செடைன் (ப்ரோசாக்) மருந்திற்கு நீண்ட காலம் வெளிப்படுவதால் ஆண் கப்பி மீனின் நடத்தை மற்றும் அதன் இனப்பெருக்கப் பண்புகள் கணிசமான அளவில் சீர்குலையும்.
  • ஆண் கப்பி மீன்கள் ஆனது சுற்றுச்சூழல் மாற்றங்களால் அதிகம் பாதிக்கப்படக் கூடியவை.
  • குறைந்த அளவிலான ஃபிலுவோக்செடைன், செயல்பாடு நிலைகளைக் குறைத்து, ஆண் கப்பி மீன்களில் அடைக்கலம் தேடும் நடத்தையினை அதிகரித்தது.
  • இது விந்தணு எண்ணிக்கையிலும் மாறுபாட்டை அதிகரித்தது.
  • அடைக்கலம் தேடும் நடத்தை என்பது, மீன்கள் மறைந்திருக்கும் அல்லது பாதுகாக்கப் பட்ட பகுதிகளில் எவ்வளவு நேரம் செலவிடுகின்றன என்பதைக் குறிக்கிறது.
  • அதிக ஃபிலுவோக்செடைன் செறிவு ஆனது மீன்களின் உடல் நிலையில் மாறுபாட்டை அதிகரித்தது.
  • ஃபிலுவோக்செடைன் அல்லது ப்ரோசாக் பரவலாகப் பயன்படுத்தப்படும் மன அழுத்த தடுப்பு மருந்தாகும்.
  • கப்பி மீன்கள் சிறிய, வண்ணமயமான மீன் இனங்கள் ஆகும் என்பனால் இவை நீர் வாழினக் காட்சியகங்களில் அலங்கார நோக்கங்களுக்காக வேண்டி மிக அதிகளவில் பயன்படுத்தப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்