மீன்களில் ஏற்படும் நோய் குறித்து தகவலளித்தலுக்கான செயலி
January 15 , 2024 469 days 269 0
நீர்வாழ் விலங்குகளில் ஏற்படும் நோய்களுக்கான தேசியக் கண்காணிப்புத் திட்டம் (NSPAAD) ஆனது, ‘மீன்களில் ஏற்படும் நோய் குறித்து தகவலளித்தல்’ என்ற கைபேசி செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் பதிவாகியுள்ள மீன் நோய்களைக் கண்காணித்துப் புகாரளிக்க இது உதவுகிறது.
இது மீன் வளர்ப்பாளர்களுக்கு அவர்களின் பண்ணைகளில் நிலவும் நோய்கள் குறித்து புகாரளிக்க ஏதுவான மற்றும் செயல்திறன் மிக்க தளத்தினை வழங்கி அவர்களுக்கு அதிகாரமளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.