ஒடிசா மாநில அரசானது பித்தர்கனிகா தேசியப் பூங்காவில் மீன்பிடிப் பூனைகளுக்காக வேண்டி ஒரு பாதுகாப்புத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
மீன்பிடிப் பூனையானது இரவு நேரங்களில் விழித்திருக்கும் ஒரு இனமாகும்.
இது மேற்கு வங்காளத்தின் மாநில விலங்காகும்.
இந்தியாவில் மீன்பிடிப் பூனைகளானது சுந்தரவனத்தின் சதுப்பு நிலக் காடுகள், இமயமலையின் அடிவாரங்களில் உள்ள கங்கை மற்றும் பிரம்மபுத்திரா நதிநீர்ப் பள்ளத்தாக்குகள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைகள் ஆகியவற்றில் முதன்மையாகக் காணப்படுகின்றன.