TNPSC Thervupettagam

மீன்பிடி மானியம் தொடர்பான புதிய ஒப்பந்தம்

March 10 , 2023 628 days 329 0
  • மீன்பிடி மானியம் தொடர்பான புதிய ஒப்பந்தத்தை அதிகாரப் பூர்வமாக ஏற்றுக் கொண்ட உலக வர்த்தக அமைப்பின் முதல் உறுப்பினர் நாடு சுவிட்சர்லாந்து ஆகும்.
  • இந்த ஒப்பந்தத்தினை அங்கீகரித்த இரண்டாவது உறுப்பினராக சிங்கப்பூர் மாறியது.
  • 2022 ஆம் ஆண்டில் நடைபெற்ற 12வது அமைச்சர்கள் மாநாட்டில் உலக வர்த்தக அமைப்பின் மீன்பிடி மானியங்கள் தொடர்பான ஒப்பந்தம் ஆனது ஏற்றுக் கொள்ளப் பட்டது.
  • இது உலகின் மீன்வளம் பெருமளவில் குறைந்து வருவதற்கு ஒரு முக்கியக் காரணியாக இருக்கும் தீங்கு விளைவிக்கும் வகையிலான மீன்பிடி மானியங்களைத் தடை செய்யும் ஒப்பந்தமாகும்.
  • வளர்ந்து வரும் நாடுகள் மற்றும் குறைந்த அளவு வளர்ச்சியடைந்த நாடுகள் ஆகியவற்றிற்கு, இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த நாளிலிருந்து இரண்டு ஆண்டுகள் வரையில் ஒரு பரிமாற்ற காலமாக கடைப்பிடிக்கப் பட அனுமதிக்கப் பட்டு உள்ளது.
  • உலக வர்த்தக அமைப்பின் சுற்றுச்சூழல் மீது கவனம் செலுத்தும் முதல் ஒப்பந்தம், கடல் நிலைத் தன்மையின் மீதான முதல் பரந்த, பிணைப்பு சார், பலதரப்பு ஒப்பந்தம் இதுவாகும்.
  • மேலும், இது உலக வர்த்தக அமைப்பு தொடங்கப்பட்டதிலிருந்து அதில் மேற்கொள்ளப் பட்ட இரண்டாவது ஒப்பந்தம் இதுவாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்