TNPSC Thervupettagam

மீன்பிடிப் பூனை குறித்த கணக்கெடுப்பு

March 10 , 2021 1231 days 614 0
  • ஒடிசாவின்  சிலிக்கா ஏரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் முதன்முறையாக நடத்தப்படும் மீன்பிடிப் பூனைகள் குறித்த கணக்கெடுப்பானது தொடங்கியது.
  • மீன்பிடிப் பூனைகள் பிடிபடாமல் நழுவுகின்ற இரவில் நடமாடும் பாலூட்டி இனமாகும்.
  • இது பொதுவாக வடக்கு மற்றும் கிழக்கு இந்தியாவின் சதுப்பு நில ஈர நிலங்கள் மற்றும் கிழக்குக் கடற்கரையின் சதுப்பு நிலங்களில் காணப்படுகின்றது.
  • சிலிக்கா ஏரியானது ஒரு உவர்ப்பு வகையிலான நீர் உப்பங்கழியாகும்.
  • இந்த ஏரியானது வங்காள விரிகுடாவில் பாயும் தயா நதியின் முகத்துவாரத்தில்  அமைந்துள்ளது.
  • இது நியூ கேலிடோனியன் பவளப் பாறையடுக்கிற்கு அடுத்து ஆசியாவின் மிகப்பெரிய மற்றும் உலகில் 2வது மிகப்பெரிய உப்பங்கழியாக விளங்குகின்றது.
  • இந்த ஏரியானது இந்தியத் துணைக் கண்டத்தில் எங்கும் காணப்படும் புலம்பெயர்வு நீர்ப்பறவைக்கான மிகப்பெரிய குளிர்காலத்  தளமாக விளங்குகின்றது.
  • 1981 ஆம் ஆண்டில் ராம்சார் ஒப்பந்தத்தின் கீழ் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த முதலாவது இந்திய சதுப்பு நிலம் இதுவாகும்.
  • சிலிக்கா ஏரியில் முக்கிய ஈர்ப்புத் தன்மையுள்ளதாக விளங்குவது ஐராவதி நதி டால்பின்களாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்