TNPSC Thervupettagam

மீன்பிடிப்பிற்குத் தடை

April 17 , 2019 2051 days 625 0
  • இனப்பெருக்கக் காலத்தை முன்னிட்டு தமிழ்நாடு கடற்கரை நெடுகிலும் வருடாந்திர 61 நாட்கள் மீன்பிடி தடைக் காலமானது ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.
  • 2017 ஆம் ஆண்டில் இந்தத் தடைக் காலமானது 45 நாட்களிலிருந்து 60 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • இராமநாதபுரம், தூத்துக்குடி, நாகப்பட்டினம் மற்றும் கடலூர் உள்ளிட்ட மாநிலத்தின் 13 மாவட்டங்களில் உள்ள ஏறத்தாழ 12,000 இயந்திரப் படகுகள் இந்தத் தடைக் காலத்தின் போது கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லாது.
  • இந்தத் தடையானது நாட்டுப் படகுகளுக்குப் பொருந்தாது. அவை வழக்கம் போல மீன் பிடித்தலை மேற்கொள்ளும்.
  • தமிழ்நாடு மாநிலமானது 1076 கிலோ மீட்டர் கடற்கரை எல்லையைக் கொண்டுள்ளது. கடல் மீன் உற்பத்தியில் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு விளங்குகிறது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்