TNPSC Thervupettagam

மீன்வளம் சார் புத்தொழில் மாநாடு 2.0

March 16 , 2025 15 days 69 0
  • மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மீன்வளத் துறையானது, ஐதராபாத்தில் மீன்வளம் சார்ந்தப் புத்தொழில் மாநாடு 2.0 நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்தது.
  • இந்த நிகழ்வு ஆனது, மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்புத் துறைகளில் தொழில்முனைவு, தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் நிலைத் தன்மையை மேம்படுத்துவதை ஒரு முக்கிய நோக்கமாகக் கொண்டதாகும்.
  • இந்த மாநாட்டின் போது, ​​NFDP கைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இது பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்ரிதி சஹ்-யோஜனா (PM-MKSSY) எனும் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது.
  • இந்தச் செயலியானது மிகவும் குறிப்பாக மீன்வளத் துறையில் உள்ள புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு நன்குப் பயனளிக்கும் வகையில் அவர்கள் அரசாங்கத் திட்டங்களை அணுகுவதை எளிதாக்குவதற்காக என வடிவமைக்கப் பட்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்