TNPSC Thervupettagam

மீப்பெரு நீல நிலவு 2024

August 26 , 2024 89 days 154 0
  • இது ஒரு மீப்பெரு மற்றும் நீல நிலவு ஆகியவற்றின் ஒரு தனித்துவமான கலவையாக நிகழ்ந்த ஓர் அசாதாரண வான நிகழ்வாகும்.
  • 1979 ஆம் ஆண்டு ரிச்சர்ட் நோல்லே என்பவரால் மீப்பெரு நிலவு (சூப்பர் மூன்) என்ற சொல் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • நிலவு பூமிக்கு மிக நெருக்கமாக வரும் அண்மை நிலை எனப்படும் பகுதியினை ஒரு முழு நிலவு அடையும் போது மீப்பெரு நிலவு ஏற்படுகிறது.
  • இந்த அண்மை நிலையானது நிலவினை வழக்கத்தை விட மிகவும் பெரிதாகவும் மிகப் பிரகாசமாகவும் காட்டுகிறது.
  • "நீல நிலவு" என்ற சொல் வரலாற்று ரீதியாக நான்கு முழு நிலவுகளைக் கொண்ட ஒரு பருவத்தில் மூன்றாவதாக ஏற்படும் முழு நிலவைக் குறிக்கிறது என்ற நிலையில் இந்த நிகழ்வு ஒப்பீட்டளவில் அரிதாகாகவே நிகழ்கிறது.
  • இந்த சொல்லின் பயன்பாட்டிற்கான ஒரு ஆரம்ப காலப் பதிவு 1528 ஆம் ஆண்டிற்கு முந்தையதாகும்.
  • முழு நிலவுகளில் சுமார் 25% மட்டுமே மீப்பெரு நிலவுகள் ஆகும் என்ற ஒரு நிலையில்  தோராயமாக 3% நீல நிலவுகள் ஆகும்.
  • அடுத்த மீப்பெரு நீல நிலவு நிகழ்வுகள் ஆனது 2037 ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் நிகழும் என எதிர்பார்க்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்