TNPSC Thervupettagam

மீயொலி இடைமறிப்பு ஏவுகணை

December 29 , 2017 2524 days 753 0
  • உள்நாட்டுத் தொழிற்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ள அதிநவீன வான் பாதுகாப்பு ஏவுகணையை வங்கக்கடலில் ஒடிஸாவின் பாலசோரில் உள்ள அப்துல் கலாம் வீலர் தீவில்  இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
  • இது 2017ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட 3 மூன்றாவது மீயொலி இடைமறிப்பு (Supersonic interceptor) ஏவுகணையாகும்.
  • வளிமண்டலத்தில், தரையிலிருந்து 30 கிலோ மீட்டருக்கு உட்பட்ட உயரத்திற்குள், தாழ்வான மட்டத்தில், உள் வருகைப் புரிந்த பிரித்வி எனும் கண்டங்களுக்கிடையேயான  ஏவுகணையை   இந்த இடைமறிப்பு   ஏவுகணை  தாக்கி அழித்துள்ளது.
  • 5 மீட்டர் நீளமுடைய இந்த ஒற்றை திட எரிபொருள் நிலைகொண்ட, உந்து வழிகாட்டு அமைப்புடைய ஏவுகணை, வழிகாட்டு அமைப்புகள், உயர் தொழில்நுட்ப கணிணி மற்றும் மின்னணு இயந்திரவியல் செயலாக்கிகளையும் (Activator) கொண்டது.
  • இது இந்தியாவின் இரண்டடுக்கு கண்டங்களுக்கு இடையிலான ஏவுகணை (Two-layered ballistic missile defense) பாதுகாப்பு அமைப்பின் ஓர் பகுதியாகும்.
  • இது இவ்வமைப்பின் இரண்டாம் அடுக்கு பாதுகாப்பு அமைப்பாகும்.
  • உலகில் இஸ்ரேல், இரஷ்யா, அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே இதுவரை வெற்றிகரமாக உள்நாட்டுத் தொழிற்நுட்பமுடைய, கண்டங்களுக்கு இடையிலான ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை உருவாக்கியுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்