இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) இணைந்து மீயொலி வாகன சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டது.
அதிநவீன தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த மீயொலி வாகனமானது, விண்வெளியை விரைவாக அடைவதன் மூலம் நீண்ட தொலைவிற்கு இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திறன் கொண்டது.
ஒரு மீயொலி வாகனம் என்பது ஒலியின் வேகத்தை விட ஐந்து மடங்கு வேகமாக அல்லது மேக் 5 என்ற அளவை விட அதிகமான வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்ட ஒரு விமானம், ஏவுகணை அல்லது விண்கலமாக இருக்கலாம்.
இந்தியா ரஷ்யாவுடன் இணைந்து மீயொலி ஏவுகணைகளை உருவாக்கி வருகிறது.