TNPSC Thervupettagam

மீள இயலாத கொதிப்பு இல்லமாக மாறும் பூமி

August 8 , 2018 2302 days 785 0
  • சமீபத்திய ஆய்வின் படி, மீள இயலாத கொதிப்பு இல்லமாக மாறும் நிலை பூமிக்கு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. பாரீஸ் பருவநிலை மாற்றம் 2015 - ஒப்பந்தத்தின் படி அனைத்து இலக்குகளும் எட்டப்பட்டாலும் உலக வெப்பநிலையானது 4 முதல் 5 டிகிரி அதிகரிக்கும் என்று இந்த ஆய்வு குறிப்பிடுகிறது.
  • ‘கொதிப்பு நிலை பூமி’ பருவநிலையானது தொழில் புரட்சிக்கு முந்தைய வெப்பநிலையை விட உலக சராசரியில் 4 முதல் 5 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்கும். கடல்மட்ட உயர்வு தற்பொழுது உள்ளதைவிட 10-60 மீட்டர் உயரம் அதிகரிக்கும்.
  • தற்பொழுது, உலக சராசரி வெப்பநிலையானது தொழில் புரட்சிக்குப் பின்னர் 1 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளது. இது ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும்17 டிகிரி செல்ஷியஸ் என்ற அளவில் அதிகரித்து வருகிறது.
  • கிட்டத்தட்ட 200 நாடுகளால் ஒப்புக் கொள்ளப்பட்ட 2015 - பாரீஸ் பருவ நிலை மாநாட்டின் முடிவில் உலக வெப்பமாதலை5 - 2 டிகிரி செல்ஷியஸ்க்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்பது முன்பு மதிப்பீடு செய்ததை விட மிகக் கடினமாகும்.
  • இந்த ஆய்வானது 10 இயற்கையான கருத்து செயல்முறைகளை கருத்தில் கொண்டுள்ளது. இது குறிப்பிட்ட அளவிற்கு அதிகமாகும் போது இவை யாவும் திடீர் மாற்றத்திற்கு இட்டுச் செல்லும் கூறுகள் ஆகும்.
  • இந்தக் கருத்து செயல்முறைகளாவன
  1. நிலத்தடி உறைபனியின் நிரந்தரமான உருகுதல்
  2. வலுவிழக்கும் நில மற்றும் கடற்கார்பன் உமிழ்வி
  3. கடற்படுகையிலிருந்து மீத்தேன் ஹைடிரேட்ஸின் இழப்பு
  4. கடலில் பாக்டீரியாவின் சுவாசிப்பு அதிகரித்தல்
  5. வன உயிரிழப்பு - அமேசான் காடுகள் உயிரிழப்பு
  6. வடதுருவத்தில் பனிப்போர்வை/அண்டார்டிகா கடல் பனி/துருவ பனிப்படலம் ஆகியவை குறைதல்
  7. ஆர்டிக்கின் கோடைக்கால கடற்பனி இழப்பு

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்